செருப்பை எடுத்து அடிக்க வந்தாங்க.. மூக்கை உடைத்ததற்கான உண்மை காரணத்தை கூறிய சொமாட்டோ ஊழியர்! குவியும் ஆதரவு
கடந்த நாளில் இளம்பெண் ஒருவர் சொமாட்டோ ஊழியர் ஒருவர் தன்னை தாக்கியதாக வீடியோவை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார். தற்போது, போலீசார் விசாரணையில் ஊழியர் தன்னை தாக்கியதாக இளம் பெண் கூறிய புகாரில் என்ன நடந்தது என்பது குறித்து சொமாட்டோ ஊழியர் விளக்கமளித்துள்ளார்.
அதில், உணவுக்கான பணத்தை அந்த பெண் தர மறுத்ததாகவும், ஆர்டர் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக தனக்கு தகவல் வந்ததால், உணவை திருப்பி கேட்டபோது அதற்கும் அவர் மறுத்ததாகவும் ஊழியர் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த பெண்ணை தன்னை திட்டியதோடு, அவரது செருப்பை எடுத்து தன்னை தாக்கியதாகவும், அதனை தான் தடுக்க முயற்சித்தபோது அவரது கையில் இருந்த மோதிரம் அவரது மூக்கில் பட்டு அவருக்கு இரத்தம் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சம்மந்தப்பட்ட சொமாட்டோ ஊழியருக்கு ஆதரவாக நெட்டிசன்கள் டிவிட்டரில் #Men Too என்ற ஹேஷ்டாக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.