viral video: இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூரிய - நடிகர் ரவி மோகன் சந்திப்பு!
இலங்கையில் படிப்பிடிப்பு பணிகளில் ஈடுப்பட்டு வரும் நடிகர் ரவி மோகனை இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூரிய சந்தித்துள்ள விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பராசக்தி திரைப்படம்
பராசக்தி திரைப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக நடிகர் சிவகார்த்திகேயன், ரவி மோகன் உட்பட படக்குழுவினர் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடந்து வருகிறது.
இப்படத்தில் ரவி மோகன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அதர்வா மற்றும் ஸ்ரீலீலா முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையில் யாழ்ப்பாண நூலகம் எரிந்த சம்பவத்தை நினைவுப்படுத்தும் விதமான காட்சிகளை எடுக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்நிலையில், பராசக்தி திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரவி மோகன் மற்றும் இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூரிய சந்தித்து பேசிய காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைராலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |