சூர்யாவுடன் சனம் வெளியிட்ட புகைப்படம்: கேலி செய்த நெட்டிசன்களுக்கு கொடுத்த சரியான பதிலடி
நடிகை சூர்யாவின் உயரத்தை கேலி செய்த ரசிகர்களுக்கு நடிகை சனம் ஷெட்டி தரமான பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகர் சூர்யா நேற்றைய தினத்தில் தனது 47வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், ரசிகர்கள், பிரபலங்களின் வாழ்த்துக்களும் குவிந்தது.
அவரின் பிறந்தநாளை முன்னிட்டு சூர்யா 40 படத்தின் டைட்டில் ‘எதற்கும் துணிந்தவன்’ மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.
இந்நிலையில் பிக்பாஸ் மூலம் பிரபலமான சனம் ஷெட்டி சூர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவு ஒன்று சலசலப்பை கிளப்பியுள்ளது.
சூர்யாவுடன் தான் எடுத்த புகைப்படத்தினை வெளியிட்டு அவருக்கு வாழ்த்து கூறிய நிலையில், இதனை அவதானித்த நெட்டிசன்கள் உயரத்தை கேலி செய்ய ஆரம்பித்ததால், சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சனம் ஷெட்டி, 'இன்று சூர்யா பிறந்தநாள் கொண்டாட்டம். சண்டை எதுக்கு. நான் அனைவரோட திறமையும், அனைத்து ரசிகர்ளையும் மதிக்கிறேன். பேன்ஸ் சண்டை வேண்டாமே' என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்றைய தினம் அவரின் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பில் அவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.
Iniki Surya sir Bday kondaatam naal.. sandai vendaame !
— Sanam Shetty (@ungalsanam) July 23, 2021
I respect all true talents and all true fans ❤️❤️❤️❤️
Fans fights edhuku brothers?!
Anbudan #ungalsanam 🙏#HBDSuriya #gnfam https://t.co/LgbHTkEL8Z