டிசம்பர் மாதத்தில் கொடிகட்டி பறக்கும் 3 ராசிகள்... யார் யார்னு தெரியுமா?
December Lucky Zodiac: டிசம்பர் மாதத்தில் நடைபெறும் கிரக பெயர்ச்சியினால் எந்தெந்த ராசியினருக்கு அதிர்ஷ்டம் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் 2026ம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பர் மாதத்தில் பல கிரக மாற்றங்கள் நிகழ உள்ளது.
ஜோதிட ரீதியாக முக்கியமாக பார்க்கப்படும் நிலையில் இந்த மாதத்தில் 4 முக்கிய கிரகங்களின் பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றது.
மாதத்தின் தொடக்கத்தில் நிகழ் கிரகங்களான ராகு மற்றும் கேது ராசி மாற்றம், அதனைத் தொடர்ந்து சனி பகவான் மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடைகின்றார்.
மேலும் குரு பகவான் சிம்ம ராசியில் வக்ர நிலையில் பயணத்தினை தொடங்கவுள்ளதுடன், சூரியன் தனுசு ராசிக்குள் நுழைய உள்ளார்.
இவ்வாறு குறித்த மாதத்தில் கிரகங்களின் நிலைகள் அதிகமாக மாறுவதால் சில ராசியினருக்கு வாழ்க்கையில் பொற்காலமாக இருக்கும். அந்த வகையில் சிறப்பான பலனை பெறும் மூன்று ராசிகளை தெரிந்து கொள்வோம்.

கன்னி
கன்னி ராசியினருக்கு டிசம்பர் மாதமானது மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கின்றது. வேலையில் பெரிய அளவில் வெற்றி கிடைப்பதுடன், நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலைகளும் முடிவடையும்.
கடின உழைப்பிற்கு ஏற்ப பலனை இந்த மாதத்தில் பெருவதுடன், அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகமுமு் இருக்கும்.

மகரம்
மகர ராசியினருக்கு இந்த டிசம்பர் மாதத்தில் நிதி ரீதியாக சிறப்பான பலன் கிடைப்பதுடன், செல்வாக்கும் வலுவாக இருக்குமாம். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். நிலுவையில் உள்ள வழக்குகள் சாதகமான முடிவு கிடைக்கும்.
வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைப்பதுடன், கடின உழைப்பிற்கான பலனையும் இந்த மாதத்தில் நிச்சயம் பெறுவீர்கள். குறிப்பாக நிலுவையில் உள்ள வேலையும் தடை இல்லாமல் முடிவிற்கு வரும்.

துலாம்
துலாம் ராசியினருக்கு டிசம்பர் மாதம் அதிர்ஷ்டமாக இருக்கும். தொழில் ரீதியான நல்ல வளர்ச்சி ஏற்படுவதுடன், பணப்பிரச்சனையும் படிப்படியாக குறையுமாம்.
வியாபாரிகளுக்கு நல்ல ்லாபம் கிடைப்பதுடன், குடும்ப உறுப்பினர்களுடன் பயணம், வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் கொடுத்த வாக்குறுதியை இந்த மாதத்தில் நிறைவேற்றுவீர்கள்.
ஏற்கனவே உள்ள கருத்து வேறுபாடு நீங்குவதுடன், இந்த மாதத்தில் உங்களது நீண்ட கால ஆசையும் நிறைவேறும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |