குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிக்பாஸ் சனம்: பயங்கர குஷியில் ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது உண்மையான குணத்தினை வெளிக்காட்டி ரசிகர்களை கவர்ந்தவர் தான் சனம் ஷெட்டி.
இவர் சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டீவ்வாக இருந்து வரும் நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். பல ரசிகர்கள் #AskSanam என்ற ஹேஷ்டேக்கின் கீழ் ட்வீட் செய்து அவரிடம் பல கேள்விகளை கேட்டனர்.
அதில் ஒருவர், “பிக்பாஸ் வீட்டில் தங்கியிருந்த அனுபவம் குறித்தும், சக போட்டியாளர்களால் கேலி செய்யப்படுவதை எவ்வாறு கையாண்டீர்கள்” என்று கேட்டார்.
அதற்கு சனம், “நான் கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக எந்தவொரு வெற்றியும் இல்லாமல் போராடி வந்தேன். எனவே, பிக் பாஸ் எனக்கு வாய்த்த நல்ல வாய்ப்பாக பார்த்தேன். என் கடினமான காலங்களில் நான், இது என் பொன்னான வாய்ப்பு… நான் ஒருபோதும் இதை தவறவிட மாட்டேன் என்று கூறிக்கொள்வேன்” என பதிலளித்தார்.
அதுபோல் மற்றொரு போட்டியாளர், “குக் வித் கோமாளி சீசன் 3-ல் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தால் செல்வீர்களா?” என கேட்டார். அதற்கு சனம், கண்டிப்பாக என பொருள்படும்படி, “ஒய் நாட்” என பதிலளித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.
சனம் ஷெட்டிக்கு சமையல் என்றால் இஷ்டம் என்பது பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்கள் நன்கு அறிவர். எனவே, தற்போது அளித்த பதில் வாயிலாக சூப்பர்ஹிட் சமையல் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்க பச்சை கோடி காட்டியுள்ளார்.
இருப்பினும், சீசன் 3 தொடர்பான அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளிவராததால், வரவிருக்கும் சீசனுக்கு அவர் அழைக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.