பிக்பாஸ் சம்யுக்தாவா இது? வெளியிட்ட காணொளியால் வாயடைத்துப் போன ரசிகர்கள்
பிக்பாஸ் மூலம் பிரபலமான சம்யுக்தா வெளியிட்டுள்ள குத்தாட்டம் காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் சீசன் 4 முடிந்துள்ள நிலையில், இதில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் சக போட்டியாளர்களை சந்தித்து தனது நட்பினை புதுப்பித்து வருவதை அவ்வப்போது புகைப்படம் வாயிலாக வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சம்யுக்தா, அர்ச்சனா, சோம்சேகர், ஜித்தன் ரமேஷ் உள்பட ஒரு சிலரை சந்தித்து புகைப்படம் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் சம்யுக்தா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ’நாக்கமுக்க நாக்கமுக்க’ என்ற பாடலுக்கு செம குத்தாட்டம் ஆடியுள்ளார். அவருடன் பிக்பாஸ் போட்டியாளரும் நடிகருமான ஜித்தன் ரமேஷ் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.