என்னாது Misbehave பண்ணேனா? லீக்கான ஓடியோ- சம்யுக்தாவுக்கு பதிலடி கொடுத்த ரவி
சம்யுக்தா - விஷ்ணுகாந்த் இவருவரின் விவாகரத்து சர்ச்சைக்கு ரவியின் பதில் இது தான்.
சம்யுக்தா - விஷ்ணுகாந்த்
சினிமாவில் காதல் திருமணம் என்றால் பஞ்சம் இல்லாத அளவிற்கு ஆகிவிட்டது. அப்போதைய சினிமாவில் தொடங்கி இன்றைக்கு வரைக்கும் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது.
அந்தவகையில் பிரபல தொலைக்காட்சியில் சிப்பிக்குள் முத்து என்ற சீரியலில் நடித்து வந்தவர்கள் தான் சம்யுக்தா - விஷ்ணுகாந்த்.
இவர்கள் இருவரும் காதலித்து கடந்த மார்ச் மாதம் தான் திருமணம் செய்துக் கொண்டார்கள். இந்நிலையில் இவர்களின் விவாகரத்து சர்ச்சை பல கோணங்களில் சென்றுக்கொண்டிருக்கிறது.
மேலும் சம்யுக்தாவின் கணவர் விஷ்ணுகாந்த் ஆடியோக்களை வெளியிட்டு சம்யுக்தாவிற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்திருக்கிறார்.
ரவியின் பதில்
இந்நிலையில் தற்போது ரவி சம்யுக்தா கூறிய விடயங்களுக்கு தன் பக்க நியாயத்தை வெளியிட்டிருக்கிறார் நிறைமாத நிலவே வா வெப் சீரிஸில் நடித்த ரவி பதிவொன்றில் வெளியிட்டிருக்கிறார். அந்தப் பதிவில்,
என்னாது Misbehaveஆ, மற்றவர்களை விட உங்களுக்கு என்னை நன்றாகவே தெரியும் என்பதால் நான் எதையும் தெளிவுப்படுத்த விரும்பவில்லை.
என்னுடைய பக்கத்தை 470 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பின்தொடர்ந்து வருகிறார்கள், அதில் அதிகமாகவே இருப்பது பெண்கள் தான், அவர்களில் சிலரை நான் நேரில் சந்தித்து இருக்கிறேன், அவர்களிடம் நான் ஏதாவது தப்பாக நடந்துக் கொண்டிருக்கிறேனா? அப்படி நான் இருந்தால் அவர்கள் என்னை சகோதரன் போல் பார்த்திருக்க மாட்டார்கள்.
மேலும், நான் நிறைய நடிகைகளுடன் நடித்திருக்கிறேன், அவர்கள் பாதுகாப்பான எண்ணத்துடன் தான் என்னுடன் நடித்திருக்கிறார்கள்.
நான் ஒரு நடுத்தக் குடும்பத்தில் பிறந்தவன், ஒரு நல்ல தாய் மற்றும் தகப்பனால் நல்ல முறையில் வளர்க்கப்பட்டவன், பெண்களை மதிக்க வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுத்து வளர்த்திருக்கிறார்கள்.
இதை விட நல்ல விளக்கம் கொடுத்து விட முடியாது. யாராவது என்னை காதலித்து நான் அதை ஏற்றுக் கொள்ள வில்லை என்றால் அதற்கு நான் பொறுப்பல்ல.
மேலும், இது என்னுடைய 6 வருட உழைப்பு, எனது பெற்றோருக்கு நான் ஒரே பிள்ளை என்பதாலும் குடும்பத்தை கொண்டு செல்ல வேண்டிய கடமையும் இருப்பதால் எங்கு எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியும்.
நான் என்னோட திறமையை வெளிப்படுத்த மட்டும் தான் இங்கு வந்தேன், என்னுடைய எதிர்காலத்தை திட்டத்தை கூடிய விரைவில் சொல்வேன். உங்கள் தேவைக்காக என் வாழ்க்கையில் விளையாடதீங்க, இனி கர்மா பேசுட்டும் என தனது பதிவில் கூறியிருக்கிறார்.