பெற்றோரை காப்பாற்றிய நிலையில் கொரோனாவிற்கு சிக்கிய நடிகை; அவரே வெளியிட்ட பதிவு!
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மிக மோசமான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் சினிமா நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘கோமாளி’ திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமாகி தற்போது கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வரும் நடிகை சம்யுக்தா ஹெக்டேவிற்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த மாதம் தனது பெற்றோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், அவர்கள் தற்போது குணமடைந்து வரும் நிலையில் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் சம்யுக்தா தெரிவித்துள்ளார்.
தற்போது, மருத்துவர்களின் அறிவுரைப்படி சம்யுக்தா ஹெக்டே தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.