சிறுமிகளை ஆடையின்றி தவளை கட்டி ஊர்வலமாக அழைத்துச் சென்ற அவலம் - கிராம மக்கள் கூறிய பகீர் காரணம்!
மத்தியப் பிரதேசத்தில் மழை வேண்டி 6 சிறுமிகள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தேசிய குழந்தைகள் நல ஆணையம் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வலுயுறுத்தி இருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள தமோ மாவாட்டத்தில் உள்ள கிராமம் பனியா கிராமம்.
இந்த கிராமத்தில் மழை பொய்த்துப் போனதால் நெல் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்த கிராமத்தில் 6 சிறுமிகள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு பூஜை நடத்தியுள்ளனர். சிறுமிகளின் கைகளில் மரத்தடியைக் கொடுத்து, அதில் தவளைகளைக் கட்டி வைத்துள்ளனர்.
சிறுமிகளைச் சுற்றி பெண்கள் பஜனைகள் பாடியடி ஊர்வலம் மேற்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து 2 வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பரவியதால், மத்தியப் பிரதேச போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது குறித்து தமோ மாவட்ட ஆட்சியர், இதுவரை எந்தப் புகாரும் கிராமத்திலிருந்து வரவில்லை. இருப்பினும் வீடியோக்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டிருக்கிறோம். மக்களுக்கு மூடநம்பிக்கையிலிருந்து விடுபட விழிப்புணர்வு ஏற்படுத்த ஏற்பாடு செய்ய உள்ளோம். விசாரணை அறிக்கை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சமர்ப்பிக்கப்படும் என்றார்.

