உயிரிழந்த நடன ஆசிரியின் இறுதி சடங்கில் மாணவர்கள் ஆடிய நடனம்! நெஞ்சை உருக்கும் வீடியோ வைரல்
மலேசியா நாட்டில் 32 வயதே ஆன ஒரு நடன ஆசிரியரின் உயிரிழந்தார். இவரின் மறைவிற்கு, கலைக்கு மரணமில்லை என்ற ரீதியில் அவரின் மாணவர்கள் சிலர் நடம் ஆடி இறுதி மரியாதை செலுத்தினர்.
மறைந்த நடன ஆசிரியர் நல்ல குணமுள்ளவராகவும், பல பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக நடனம் சொல்லிக்கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவரின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த உடலுக்கு எதிரே, மாணவர்கள் ஆடிய நடனம் காண்போர் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.
நடனத்தோடு, பின்னால் எழுகிற ஓலமும் ஆடுகிறவர்களின் வலியும் பாடல் இசை என அனைத்தும் மனதைப் பிழிந்து எடுக்கிறது. தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
https://www.facebook.com/teachersnewssl/videos/649308902701346/
https://www.facebook.com/teachersnewssl/videos/649308902701346/
