பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் போல் சிவகங்கையில் பெண்களுக்கு அரங்கேறிய கொடூரம்! அதிர்ச்சி
சிவகங்கை மாவட்டத்தில் சிறுமிகளை திருமண இல்ல விழாக்களுக்கு வேலைக்கு அழைத்து செல்வதாக கூறி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடூரம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வழக்கை இன்று வரை யாரும் மறக்க முடியாது. அதே போன்ற ஒரு கொடூரம் தற்போது சிவகங்கை மாவட்டத்தில் நடந்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜா.
இவர் திருமண சுபநிகழ்வுகழ்வுகளுக்கு வரவேற்பு நிகழ்வுகளுக்கு சிறுமிகள், இளம்பெண்களை அழைத்து செல்லும் தொழில் செய்து வருகிறார்.
இந்நிலையில், ராஜா இது போன்ற நிகழ்வுகளுக்கு அழைத்து செல்லும் பெண்களை ஆசை வார்த்தை கூறி பாலியல் இச்சைக்கு பயன்படுத்தி வருவதாக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் வந்தது.
இது குறித்து விசாரணை நடத்தியபோது, கடந்த சில வருடங்களாக ராஜா ஏழ்மை நிலையில் உள்ள பெண்களை குறிவைத்து வேலை கொடுப்பதாக கூறி பண ஆசை காட்டி வந்துள்ளார் என்பது தெரியவந்தது.
இத்துடன் வறுமையில் வரும் பெண்களை மதுபோதைக்கு அடிமையாக்கி, பல வி.ஜ.பிகளின் பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தி வந்துள்ளதாக தற்போது பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார்.
