பேத்தியை கர்ப்பமாக்கிய தாத்தாவுக்கு போக்சோ சட்டம் பாய்ந்தது! கருவை களைத்து தலைமறைவான செவிலியர் கைது!
கள்ளக்குறிச்சி, செல்லங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவர் கடந்த 3ம் தேதி பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கினார். இது குறித்து போலீசில் புகார் கொடுத்ததையடுத்து, தாத்தா முனியாண்டியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
இதனையடுத்து, கருவை களைக்க பேத்தியை அழைத்து சென்ற பெண் இந்திராணி என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியின் கருவை களைத்த மனம்பூண்டி பகுதியை சேர்ந்த செவிலியர் ராஜாமணி என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். இவரை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில், 14 நாட்கள் கழித்து ஓய்வு பெற்ற செவிலியர் ராஜாமணி அவரது உறவினர் வீட்டில் தலைமறைவாக தஞ்சாவூரில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து, அங்கு விரைந்து சென்ற தனிப்படை போலிசார் ராஜாமணியை கைது செய்தனர்.
இதன் பின்னர், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலிசார் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். கருகலைப்பில் ஈடுபட்டு வந்த ராஜாமணியை குண்டர் தடுப்பு காவலில் அடைக்க கோரி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
