நடிகர் விஜய் வாரிசுக்கு போட்டியாக களமிறங்கும் பிரபல நடிகரின் மகன்..! இவர்களுக்கு இப்படி ஒரு போட்டியா?
நடிகர் விஜயின் மகன் - சஞ்சய் மற்றும் பிரபல நடிகர் சமுத்திரகனியின் மகன் ஹரியும் இயக்குநர்களாக சினிமாவில் காற்பதித்துள்ளார்கள்.
தமிழ் சினிமாவில் முன்னணியில் இருந்து வருபவர் தான் நடிகர் விஜய்.
இவர் நடிப்பில் இறுதியாக வாரிசு திரைப்படம் வெளியாகியது தொடர்ந்து லியோ திரைப்படம் வௌியாகவுள்ளது.
நடிகர் விஜயின் குழந்தைகள் வெளிநாட்டில் தன்னுடைய மேற்படிப்பை தொடர்ந்து வரும் நிலையில் விஜயின் ஆசை மகன் சஞ்சயை தன்னை சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் கொடுக்காமல் இயக்குநராக களமிறங்கியுள்ளார்.
சஞ்சய்க்கு போட்டியாக வரும் ஹரி
இதனை தொடர்ந்து சஞ்சய் வயதில் இருக்கும் நடிகர் சமுத்திரகனியின் மகன் ஹரி விக்னேஸ்வரன் சஞ்சயிற்கு போட்டியாக இயக்குநராக உருவெடுத்துள்ளார்.
கோலிவுட் சினிமாவை பொருத்தமட்டில் விஜயும் சமுத்ரகனியும் சிறந்த நடிகர்களாக இருந்து வருகிறார்கள்.
இவர்களின் குழந்தைகளின் திரைப்படங்கள் எவ்வாறு இருக்க போகிறது என்பதனை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் சமுத்ரகனியின் மகன் ஹரி இயக்கத்தில் காணொளியொன்று வெளியாகியுள்ளது.
இந்த காணொளியை பார்க்கும் போது சமுத்ரகனியை போல் அவரின் மகனும் சிறந்த கலைஞராக வருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
