நேர் மூக்கு இருந்தால் அவர்கள் பணக்காரர்களாம்..!! இதை வைத்து கூட ஒருவர் யார் -ன்னு சொல்லலாமா?
பொதுவாக ஒருவரின் உறுப்புகளையும் நடத்தையும் பார்த்து அவர்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாம்.
அது போல் ஒருவரின் மூக்கை வைத்து அவர்கள் எப்படியானவர்கள் என தெரிந்து கொள்ளலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றது.
மேலும் கடலியல் பற்றி உங்களுக்குத் தெரிந்து வைத்திருப்பவர்கள் ஒருவரின் உடல் உறுப்புகளைப் பார்த்து எவ்வாறு கணிப்பது என்பதனை அறிந்து வைத்திருப்பார்கள்.
இந்தியா போன்ற நாடுகளில் வேதங்கள், புராணங்கள் மற்றும் சாஸ்திரங்களில் அத்தகைய அறிவுக்கு பஞ்சமில்லை. அந்த வகையில் 15 வகையான மூக்கு வடிவம் மற்றும் அந்த நபர்களின் இயல்புகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
மூக்கு சமுத்திர சாஸ்திரம்
1. கிளி போன்ற மூக்கு கொண்டவர்கள் - வாழ்க்கையில் உயர்ந்தவனாய் இருப்பான். அதுவும் பெண் என்றால் உயர்ந்த இடங்களில் திருமணம் நடக்கும்.
2. பெரிய மூக்கு கொண்டவர்கள் - ஒரு விடயத்தை நிதானமான செய்வார்கள்.
3. நேராக மூக்கு கொண்டவர்கள் - ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
4. வளைந்த முன் மற்றும் தடித்த மூக்கு கொண்டவர்கள் - அடிக்கடி தவறு செய்வார்கள். தவறை சரியாக செய்யாமல் மாட்டிக் கொள்வார்கள்.
5. உலர்ந்த மூக்கு கொண்டவர்கள் - நீண்ட ஆயுள் கொண்டவர்களாக இருப்பார்கள்.
6. தட்டை மூக்கு கொண்டவர்கள் - ஆண்களாக இருந்தால் பெண்கள் விடயத்தில் கொஞ்சம் கவனமின்றி இருப்பார்கள்.
7. முன்பக்கத்திலிருந்து சற்று வளைந்த மூக்கு கொண்டவர்கள் - அதிகமான வசதி கொண்டவர்களாக இருப்பார்கள். 8. மூக்கு வலப்புறமாக சாய்ந்திருப்பவர்கள் - கடுமையானவர்களாக இருப்பார்கள்.
9. முன்பக்கத்திலிருந்து இரண்டு பகுதிகளாக மடிந்த மூக்கு கொண்டவர்கள் - ஊதாரியாக இருப்பார்கள்.
10 . மிகப் பெரிய அல்லது மிகச் சிறிய மூக்கு உடையவர்கள்- அறிவு குறைவாக இருக்கும் ஆனால் பெரியவர்கள் போல் பேசிக் கொண்டே இருப்பார்கள்.
11. மூக்கின் சிறிய துளைகள் கொண்டவர்கள் - மங்களகரமானவர்களாக இருப்பார்கள்.
12 .கீழ்நோக்கி சாய்ந்த மூக்கைக் கொண்டவர் - தனி வழியில் பயணிப்பார்கள்.
13 . சிறிய மற்றும் தட்டையான மூக்கு கொண்டவர்கள் - மகிழ்ச்சியின் மறு உருவமாக இருப்பார்கள்.
14. மூக்குத் துவாரம் பெரிதாக இருப்பவர்கள் - காதலர்கள் பின் அதிகமாக ஓடுவார்கள்.
15. நேர் மூக்கு கொண்டவர்கள் - எந்த விடயத்திலும் நேர்மையாக இருக்க வேண்டும் என ஆசை கொள்வார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |