உங்களது போன் டிஸ்ப்ளேயில் பச்சை நிற கோடு இருக்குதா?
சாம்சங் போன்களில் அதிகமான அளவில் ஸ்கிரீன் லைன் பிரச்சினை காணப்படும் நிலையில், இதனை கட்டணம் இல்லாமல் சரிசெய்து கொடுக்க பிரபல நிறுவனம் கூறியுள்ளது.
சாம்சங் போனில் ஸ்கிரீன் கோடு
சாம்சங் நிறுவனத்தின் சில கேலக்ஸி S சீரிஸ் போன்களில் பச்சை நிறத்தில் கோடு ஒன்று வருகின்றது.
Galaxy S20 சீரிஸ், கேலக்ஸி S21 சீரிஸ் மற்றும் S22 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு முறை இலவசமாக ஸ்கிரீனை மாற்றித் தருவதாக சாம்சங் கூறியுள்ளளது.
சாம்சங் நிற போன்களில் சமீப காலமாக பச்சை நிறத்தில் கோடுகள் தோன்றுவதால் அதிகம் புகார் வந்த நிலையில், சாப்ட்வேர் அப்டேட் மூலம் பிரச்சினை வருவதாகவும் தெரியவந்துள்ளது.
இதனை இலவசமான மாற்றிக்கொள்ள இந்திய வாடிக்கையாளர்களுக்கு சாம்சங் நிறுவனம் முன் வந்துள்ளது. அதாவது தகுதியான சாம்சாங் மொபைலில் இலவசமாக ஸ்கிரீனை மாற்றிக்கொள்ள, சில நிபந்தனைகளும் உள்ளன. அதற்கு உட்பட்டுதான் ஸ்கிரீன் மாற்றம் செய்ய முடியும்.
மொபைல் வாங்கி மூன்று ஆண்டுகளுக்குள் இருந்தால், கேலக்ஸி எஸ்20 சீரிஸ், கேலக்ஸி எஸ்21 சீரிஸ் மற்றும் எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் பயனர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்த முடியும்.
மொபைல் கீழே விழுந்து சேதம் அடைந்திருந்தாலோ, தண்ணீரால் பாதிக்கப்பட்டிருந்தாலோ இலவச ஸ்கிரீன் மாற்றத்திற்கு ஏற்றுக்கொள்ளப்படாது.
சாம்சங்கில் குறிப்பிடப்பட்டுள்ள மாடல்கள் மட்டுமின்றி மற்ற சில மாடல்களும் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில், அதற்கான ஆலோசனை எதுவும் வழங்கவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |