Samsung : விரைவில் அறிமுகமாகும் Samsung Galaxy S24 FE... விலை எவ்வளவு வரும்?
Samsung நிறுவனம் Galaxy S24 FE மாடலை முன்கூட்டியே வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samsung Galaxy S24 FE
Samsung நிறுவனம் தனது Galaxy S23 FE போனை கடந்த ஆண்டு அக்டோபரில் அறிமுகப்படுத்தியது.
தற்போது இதே வரிசையில் Galaxy S24 FE என்ற போனை, எதிர்பார்த்ததைவிட மிகவும் முன்கூட்டியே குறித்த அறிமுகம் செய்யும் என்று வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றது.
Galaxy S24 FE வருகின்ற ஜூன் முதல் ஆகஸ்ட் மாதத்திற்கு இடையிலான காலகட்டத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி குறித்த நிறுவனம் Samsung Galaxy Ring, Galaxy Z Fold 6, Galaxy Z Flip 6, Galaxy Watch 7 வரிசையை வரும் ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதம் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.
Samsung Galaxy S24 FE சிறப்பம்சம்
6.1-இன்ச் AMOLED Display, சந்தையைப் பொறுத்து Exynos 2400 SoC அல்லது Snapdragon 8 Gen 3 SoCல் இயங்கும்.
இது 12ஜிபி எல்பிடிடிஆர்5எக்ஸ் ரேம் கொண்டதாகவும், 128ஜிபி மற்றும் 256ஜிபி யுஎஃப்எஸ் 3.1 சேமிப்பக விருப்பங்களில் வழங்கப்படலாமாம்.
4,500mAh பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. Galaxy S23 FE மொடலை இந்திய சந்தையில் சுமார் ரூ. 54,000 என்ற விலையில் விற்பனையாகின்றது.
ஆனால் Galaxy S24 FE மொலை ரூ.60 ஆயிரத்திற்கு சந்தையில் விற்பனை செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகின்றது.
ஆனாலும் பயனர்கள் அதிகாரப்பூர்வ தகவலுக்காக காத்திருக்கின்றனர். விரைவில் இந்த தகவல் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |