வாக்கி டாக்கியாக பயன்படும் சாம்சங்கின் வாட்ச்- கொண்டாட்டத்தில் வாடிக்கையாளர்கள்
சாம்சங் நிறுவனமானது பல ஆண்டுகளாகவே வாடிக்கையாளர்களுக்கு மனம் கவரும் வகையில் ஸ்மார்ட்போன்களை வழங்கி வருகிறது.
ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி Wear OS 3 இன்டர்ஃபேஸ் பொருத்தப்பட்ட Samsung Galaxy Watch 4, பொதுமக்களால் மிகவும் விரும்பப்பட்டு வருகிறது.
தற்போது இதை நிறுவனம் இன்னும் மேம்படுத்தியுள்ளது. இனி இதை ஒரு வாக்கி டாக்கியாக மாற்ற முடியும். சாம்சங் இந்த அற்புதத்தை எப்படி செய்துள்ளது என்று பார்ப்போம்.
சாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் 4-ன் முன்பதிவு ஆகஸ்ட் 30 முதல் தொடங்கியது. வாடிக்கையாளர்கள் இந்த வாட்சை (Smartwatch) சந்தையில் இருந்து செப்டம்பர் 10 முதல் வாங்கலாம்.
இந்த வாட்ச் குறித்து மக்கள் ஏற்கனவே மிகவும் உற்சாகமாக உள்ளனர்.
மேலும், இப்போது உற்சாகத்தை இன்னும் அதிகரிக்கும் செய்தி ஒன்று வந்துள்ளது.
இப்போது பயனர்கள் சாம்சங் செயலி மூலம், கேலக்ஸி வாட்ச் 4 ஐ வாக்கி டாக்கியாகப் பயன்படுத்த முடியும்.