வீகன் லெதர் கொண்ட Samsung Galaxy F55... விலை மற்றும் சிறப்பம்சம் என்ன?
இந்தியாவில் Samsung Galaxy F55 5G ஸ்மார்ட்போன் கடந்த 27ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இதன் விலை, மற்ற விபரம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
Samsung Galaxy F55 5G
Samsung Galaxy F55 5G ஸ்மார்ட்போனாது, குவால்காமின் ஸ்னாப்டிராகன் 7 ஜெனரல் 1 SoC மூலம் இயக்கப்படுவதுடன், 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.
50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா யூனிட் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் ஆகியவற்றையும், கூடுதல் சிறப்பாக வீகன் லெதர் கொண்டு இரண்டு வண்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
இந்தியாவில் Samsung Galaxy F55 5Gன் 8GB RAM + 128GB ROM மாடல் ரூபாய் 26,999 என்றும், 8GB RAM + 256GB ROM மற்றும் 12GB RAM + 256GB ROM வகைகளின் விலை ரூ. 29,999 மற்றும் ரூ. 32,999 என்று கூறப்படுகின்றது.
Apricot Crush மற்றும் Raisin Black என்ற இரு வண்ணங்களில், Flipkart வழியாக கடந்த மே 27 அன்று இரவு 7 மணிக்கும் இதன் விற்பனை தொடங்கியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனானது, 6.55-இன்ச் முழு-HD+ (2,400 x 1,080 பிக்சல்கள்) Super AMOLED Plus டிஸ்ப்ளேவை 120Hz Refresh வீதத்துடன் கொண்டுள்ளது.
மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1TB வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பகத்தையும் இந்த ஃபோன் ஆதரிக்கிறது.
இரட்டை நானோ சிம்-ஆதரவு கொண்ட இந்த தொலைபேசி 5G, 4G, Wi-Fi, GPS, Glonass, Beidou, Galileo, QZSS, NFC மற்றும் USB Type-C இணைப்புகளை வழங்குகிறது.
பாதுகாப்பிற்காக, இது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் நாக்ஸ் பாதுகாப்பு மென்பொருளைக் கொண்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |