ஆர்டர் செய்த சமோசாவில் சீரியல் நம்பர்... இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!
சமோசா பிடித்தமான உணவு, குறிப்பாக வட இந்தியாவில் மக்கள் அதிகமாக சமோசா சாப்பிடுகின்றனர்.
இந்நிலையில் சமோசாக்கள் செய்வது பல முறைகளில் பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நிதின் மிஷ்ரா என்பவர் தான் ஆர்டர் செய்த சமோசாவில் சீரியல் நம்பர் இருப்பதாக அவர் தனது ட்வீட்டிரல் தெரிவித்து அதன் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.
இந்த டவீட் வைரலான நிலையில் பலர் இந்த சீரியல் நம்பர் பொறிக்கப்பட்ட சமோசாகளை தாங்கள் இப்பொழுது தான் பார்ப்பதாகவும், இது ஏன் பொறிக்கப்பட்டுள்ளது என காரணம் தெரியவில்லை எனவும் பேசினர்.
Samosas I ordered had serial numbers ? Can tech pls stay away from my halwai. pic.twitter.com/DKo1duIiC9
— Nitin Misra (@nitinmisra) September 1, 2021
பலர் இது ஒரு வித்தியாசமான பழக்கமாக இருப்பதாக கருத்திட்டிருந்தனர். இந்த சமோசாவின் புகைப்படம் வைரலான நிலையில் சிலர் இதற்கு பதிலும் கிடைத்தது.
பெங்களூரு மற்றும் குர்கானில் இயங்கிவரும் சமோசா விற்பனை செய்யும் பிராண்ட் ஒன்று அது என்ன வகை சமோசா என்பதை அடையாளம் காண இப்படியாக நம்பரிங் செய்கிறார்களாம்.
குறிப்பாக வெஜ், நான் வெஜ் வித்தியாசம் காண இப்படியாக நம்பரிங் செய்கிறார்களாம்.