ஆர்டர் செய்த சமோசாவில் இருந்த சீரியல் எண்கள்: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்
சமோசா பார்ட்டி என்ற கடையில் ஆன்லைனில் சமோசா வாங்கிய நபர் அந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். ஆம் சீரியல் எண்கள் கொண்ட சமோசா புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
உலகில் பெரும்பாலான நபர்கள் விரும்பி உண்ணும் சமோசாவில் பல வகைகள் விறக்கப்படுகின்றது. ஒரு ட்விட்டர் பயனர் சமோசாவை ஆன்லைனில் ஆர்டர் செய்தபோது, அவருக்கு சீரியல் எண் கொண்ட சமோசா அனுப்பப்படும் என்று அவர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
நிதின் மிஸ்ரா என்ற யூசர் சமீபத்தில் ட்விட்டரில் ஷேர் செய்த புகைப்படம் ஒன்றில் சமோசாவில் ஒரு சீரியல் எண்கள் உள்ளது. "நான் ஆர்டர் செய்த சமோசாக்களில் சீரியல் எண்கள் இருந்தன, தொழில்நுட்ப வல்லுநர்கள் என் ஹல்வாயிலிருந்து விலகி இருக்க முடியுமா” என குறிப்பிட்டு இந்த புகைப்படத்தை நிதின் மிஸ்ரா ஷேர் செய்திருந்தார். அந்த புகைப்படத்தில் இரண்டு சமோசாக்கள் சீரியல் எண்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
செப்டம்பர் 1 அன்று ட்விட்டரில் இந்த புகைப்படங்கள் ஷேர் செய்யப்பட்ட நிலையில், ஏராளமானோர் இதனை பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளனர். சட்னிகளைப் பதிவிறக்குவதற்கான QR குறியீடுகள் போன்று இதற்குப் பிறகு என்ன நடக்கும் என்று பலர் ஆச்சரியப்பட்டனர்.
இதுவரை 12,000 பேர் இந்த புகைப்படத்திற்கு லைக் செய்துள்ள நிலையில், இதுகுறித்து ஏராளமானோர் சுவாரஸ்யமாக கமெண்ட்ஸ் செய்தும் வருகின்றனர். பல உணவகங்களில் இது ஒரு பொதுவான அம்சமாகும் என்று ஒருவர் கூறியுள்ளார்.
Samosas I ordered had serial numbers ? Can tech pls stay away from my halwai. pic.twitter.com/DKo1duIiC9
— Nitin Misra (@nitinmisra) September 1, 2021