மொறு மொறு சமோசா சாட்... பத்தே நிமிடத்தில் வீட்டிலேயே செய்யலாம்! எப்படி தெரியுமா?
சுவையான சூப்பரான மொறு மொறு சமோசா சாட்டை பத்தே நிமிடத்தில் செய்து ருசிக்கலாம்.
எப்படி என்று முழுமையாக தெரிந்து கொண்டு வீட்டிலேயே செய்து சுவையுங்கள்.
தேவையான பொருட்கள்
- சமோசா - 2
- அப்பளம் - 6
- தயிர் - 3 மேஜைக்கரண்டி
- வெங்காயம் - 1
- தக்காளி - 1
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- புதினா சட்னி - 2 தேக்கரண்டி
- புளி சட்னி - 2 தேக்கரண்டி
- மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
- சாட் மசாலா - 1/2 தேக்கரண்டி
- ஓமப் பொடி - 1 கப்
- உப்பு - சுவைக்கு ஏற்ப்ப

செய்முறை
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சூடான சமோசாவை சிறு சிறு துண்டுகளாக உடைத்து போட்டு கொள்ளவும்.
அத்துடன் அப்பளத்தையும் நொறுக்கி போட்டு கொள்ளவும். தயிரை கட்டிகள் இல்லாமல் நன்கு கலந்து கொள்ளவும். நன்றாக கலந்த தயிரை சமோசாவின் மீது ஊற்றவும்.

அதன் மேல் அரைத்து வைத்த சட்னிகளை சேர்க்கவும். மசாலாவை விட இனிப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அதில் புளி சட்னியை அதிகம் சேர்க்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து அலங்கரிக்கவும்.
அதன் மேல் ஓமப் பொடியை தூவவும். இப்போது சூப்பரான சமோசா சாட் ரெடி. சூடான டீயுடன் சாப்பிட ருசியாக இருக்கும்.