ஆர்யன் கானை கைது செய்த NCB போலீசார் யார் தெரியுமா? ஷாருக்கானுக்கும் அபராதம் விதித்தவராம்
சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான்.
இவரை போதைப்பொருள் தடுப்பு முகமையின் மும்பை மண்டல இயக்குனர் சமீன் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் கைது செய்தனர்.
இதுதொடர்பான விசாரணையில், ஆர்யன் கானுக்கு போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பிருக்கலாம் என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
சமீர் வான்கடடே பணம் பறிக்கும் நோக்கில் ஆர்யன் கான் வழக்கில் கடுமை காட்டுவதாக குற்றசாட்டுகள் எழுந்த நிலையில், ஷாருக்கானையே மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியவர் என தெரியவந்துள்ளது.
அதாவது, 2011ம் ஆண்டு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், தனது குடும்பத்துடன் இங்கிலாந்து மற்றும் ஹாலந்து போன்ற நாடுகளுக்கு சுற்றுலா சென்றுவிட்டு மும்பை விமான நிலையம் வந்தடைந்தார்.
அப்போது அவரிடம் 20 லக்கேஜ்கள் இருந்த நிலையில், சமீர் வான்கடே குழுவினர், பல மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
அவர் கொண்டு வந்த லக்கேஜ்களில் விலைமதிப்பான பொருட்கள் வரி செலுத்தாமல் கொண்டுவந்திருந்தது தெரியவந்தது.
பின்னர் அவருக்கு ஒன்றரை லட்ச ரூபாயை அபராதமாக விதித்தவர் இதே சமீர் வான்கடே தான்.
ஷாருக்கான் மட்டுமல்லாது அனுஷ்கா சர்மா, அனுராக் காஷ்யப், பிபாஷா பாசு, மினிஷா லம்பா, கத்ரினா கைஃப், ரன்பீர் கபூர், விவேக் ஓபராய், மிகா சிங், ரியா சக்கர்போர்த்தி, தீபிகா படுகோனே, சாரா அலி கான், ஷ்ரத்தா கபூர் போன்ற பிரபலங்களிடமும் கடுமை காட்டியது தெரியவந்துள்ளது.