வயதான தோற்றத்தினை தள்ளிப்போட வேண்டுமா? அப்போ பழக்கத்தை வைச்சிக்காதீங்க
உலகில் எந்த சக்தியும் முதுமையை தடுத்து நிறுத்த முடியாது என்பது உண்மை தான். ஆனாலும் முதுமை வருவதை ஒத்தி போட முடியும். இன்றைய காலகட்டத்தில், இளைஞர்கள் பலர் சீக்கிரமே முதியவர் போல் தோற்றமளிப்பதையும் பார்க்கிறோம்.
முதுமைக்கான அறிகுறிகளான, உடல் பலவீனம், தோலில் சுருக்கங்கள், பொலிவிழந்த சருமம், நரை முடி, வழுக்கை, நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் இளைஞர்களை சீக்கிரமே தாக்குகின்றன.
இளம் வயதிலேயே முதுமையின் இந்த அறிகுறிகள் தோன்றுவதற்கு, நமது சில பழக்கங்களே முக்கிய காரணம், இதைத் தவிர்க்க, சில பழக்கங்களை நாம் கைவிட வேண்டும்.
கொரோனா காலத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் மடிக்கணினிகள், மொபைல்கள் மற்றும் டிவி திரைகளில் அதிக நேரம் செலவிடுகிறர்கள். இதன் காரணமாக மன அழுத்தம், உடல் பருமன், மனச்சோர்வு போன்ற பிரச்சினை ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கின்றது. இதனை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.
இளம் வயதிலேயே, குறிப்பாக பள்ளிப்பருவத்திலேயே புகைப் பிடிக்கும் பழக்கத்திற்கு சிலர் ஆளாகின்றனர். இதனால் சருமம் உயிரற்ற வறண்ட சருமமாக மாறி, சுருக்கங்கள் உண்டாகி, முதுமை தோற்றம் ஏற்படுகிறது.
ஆல்கஹால் மற்றும் காஃபின் அதிகம் எடுத்துக் கொள்வதால், செல்கள் உயிரிழந்து உங்கள் தோல், முடி மற்றும் பிற உறுப்புகள் பலவீனமடையத் தொடங்குகின்றன.
மனதில் பல பிரச்சினைகளை போட்டுவிட்டு மன அழுத்த பிரச்சினையை ஏற்படுவதால், ஹார்மோன்கள் அதிகம் சுரந்து முதுமை விரைவில் உங்களை ஆட்கொள்ளும்.
சூரிய ஒளி நிச்சயம் உடலுக்கு தேவை தான். ஆனால் தொழில் காரணமாக எந்நேரமும் வெயிலில் அதிகநேரம் செலவிட்டால் சருமத்தினை பாதிக்கும்.
ஆழ்ந்த தூக்கம் நம் உடலின் செல்களை புத்துயிர் பெறச் செய்கிறது. தினமும் 6-8 மணி நேரம் ஆழ்ந்து தூங்க வேண்டும்.
ஆரோக்கியமான உணவு செல்களுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது. இந்த காரணத்தால், குறைவான தூக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவை உட்கொள்ளும் நபர்கள் உடல், பல தோல் மற்றும் உடல் பிரச்சினைகளுக்கு விருந்தாகிறது.
உங்கள் உணவில் புரதம், இரும்பு, கால்சியம், வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை சேர்க்க வேண்டும்.