முந்திரி மரத்தில் தூக்கில் தொங்கிய தாய், மகள், மகன்- குடும்பமே பலியான சோக சம்பவம்
தமிழகத்தில் தந்தை குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் குடும்பமே சேர்ந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
கடலூர் மாவட்டத்தின் ப.எடக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ், இவரது மனைவி பாக்கியலட்சுமி(வயது36) இவர்களின் மகள் திவ்யா, (17) இருப்புக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
மகன் திவாகரன் (15) என்பவர் கோட்டேரி அரசுப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கூலித் தொழிலாளியான பாக்கியராஜ் குடி பழக்கத்துக்கு அடிமையானவர், இதனால் பாக்கியலட்சுமிக்கும், பாக்கியராஜீக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
மனைவி மட்டுமின்றி பிள்ளைகளிடமும் பாக்கியராஜ் தகராறு செய்து வந்ததால் குடும்பமே மன உளைச்சலில் இருந்து வந்தனர்.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று வழக்கம் போல் குடிக்கச் செல்வதாக போன் போட்டு மனைவிக்கு தெரிவித்துள்ளார் பாக்கியராஜ்.
இதனால் மனமுடைந்த பாக்கியலட்சுமி தனது மகள் திவ்யா, திவாகரன் ஆகியோரை நேற்று மாலை அதே பகுதியில் உள்ள சொந்த நிலத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு மூவரும் முந்திரி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து ஆலடி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
ஒரே குடும்பத்தில் தாய், மகள், மகன் என 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.