மணக்க மணக்க கல்யாண வீட்டு சாம்பார் இனி வீட்டிலேயே செய்து ருசிக்கலாம்! எப்படி தெரியுமா?
சாம்பார் ஒரு நாளையில் எத்தனை முறை கொடுத்தாலும் சாப்பிட கூடிய ஒரு உணவு.
தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் பல வகைகளில் சாம்பார் தயாரிக்கப்படுகின்றது.
சாம்பாரில் சேர்க்கப்படும் பருப்பு வகைகளில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. இது ஒரு கூட்டுக்கலவை என்பதால் ஊட்டச்சத்துகளின் ஒரு மொத்த கலவையாக உள்ளது.
ஆரோக்கியமாகவும், சுவையாகவும் சாம்பார் தயாரிக்க அதில் சில பொருட்களை சேர்க்க வேண்டும்.
இன்று நாம் ஆரோக்கியமான சாம்பாரை வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ஹோட்டல் சுவையில் சாம்பார்
தேவையான பொருட்கள்
- சின்ன வெங்காயம் – 10 எண்ணம்
- தக்காளி – 1
- பச்சை மிளகாய் – 1
- வெள்ளைப் பூண்டு – 1
- கொத்தமல்லி இலை – 1 டேபிள் ஸ்பூன்
- கடலை மாவு – 3 டேபிள் ஸ்பூன்
- மசாலா பொடி – 1 ஸ்பூன்
- கரம் மசாலா பொடி – 1/2 டீஸ்பூன்
- மஞ்சள் பொடி – 1 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- தாளிக்க நல்ல எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
- சீரகம் – 1 டீ ஸ்பூன்
- கடுகு – 1 டீஸ்பூன்
- வெந்தயம் 1/2 டீஸ்பூன்
- உளுந்தம் பருப்பு – 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை – 1 கீற்று
செய்முறை
முதலில் பரும்பை இரண்டு மணித்தியாலம் உற வைக்கவும்.
அந்த நேரத்தில் சின்ன வெங்காயம், வெள்ளைப் பூண்டுகளை தோல் நீக்கி வெட்டிக் கொள்ளவும்.
பிறகு தக்காளி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் போன்றவற்றை கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடலை மாவினை 1/2 டம்ளர் தண்ணீரில் கட்டிகள் ஏதும் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தினை அடுப்பில் வைத்து நல்ல எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளியுங்கள். பின்னர் அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
1/2 நிமிடம் கழித்து அதில் பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் பாதி வெந்ததும் அதில் வெள்ளைப் பூண்டினைச் சேர்த்து வதக்கவும்.
ஒரு நிமிடம் கழித்து நறுக்கிய தக்காளியைச் சேர்த்து மசிய வதக்கவும். பின்னர் அதனுடன் மசாலாப் பொடி, கரம் மசாலாப் பொடி, மஞ்சள் பொடி சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கிளறவும். அதில் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
மசாலாப் பொடிகளின் பச்சை வாசனை நீங்கியதும், கரைத்து வைத்துள்ள கடலை மாவினை சிறிது சிறிதாகச் சேர்த்து கட்டி சேராதபடிக் கிளறவும்.
அதனுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதித்ததும் அடுப்பினை மிதமான சூட்டில் வைத்து மூடி போட்டு 3-4 நான்கு நிமிடங்கள் அடுப்பில் வைக்கவும்.
மூடியைத் திறந்துப் பார்க்கும்போது தேவையான பதம் வந்ததும், அடுப்பினை அணைத்துவிட்டு கொத்தமல்லி இலையைத் தூவி இறக்கவும். சுவையான சாம்பார் ரெடி.