சாம்பார் சிக்கன் பிரியாணி - பத்தே நிமிடத்தில் செய்ய பக்காவான ரெசிபி
தற்போது ட்ரென்டிங்இல் போய்கொண்டிருக்கும் சாம்பார் சிக்கன் பிரியாணி எப்படி செய்யலாம் என்பதை படிமுறை படிமுறையாக விளக்கமாக பார்க்கலாம்.

சாம்பார் சிக்கன் பிரியாணி
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரே ஒரு உணவு என்றால் அது பிரியாணி தான். எல்லோருக்கும் பிரியாணி என்றால் மிகவும் பிடிக்கும்.
பொதுவாக வீட்டில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி சாப்பிட்டிருப்போம். ஆனால் தனித்துவமான சுவையில் சாம்பார் சிக்கன் பிரியாணி செய்து சாப்பிட்டு இருக்கீங்களா?.
சாம்பார் சிக்கன் பிரியாணி என்பது சீரக சம்பா அரிசியில் இஞ்சி, பூண்டு சேர்க்காமல் சாம்பார் பொடியுடன் சிக்கன், தக்காளி , வெங்காயம் சேர்த்து செய்யப்படும் தனித்துவமான சுவையை கொண்ட உணவாகும். இதை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- சிக்கன்,
- சீரக சம்பா அரிசி,
- துவரம் பருப்பு,
- நெய்,
- கருவேப்பிலை,
- கொத்தமல்லி,
- கடுகு,
- வரமிளகாய்,
- சின்ன வெங்காயம்,
- தக்காளி,
- சாம்பார் பொடி.

செய்யும் முறை
இந்த பிரியாணி செய்வதற்கு சீரகசம்பா அரிசி மற்றும் துவரம் பருப்பு எடுத்து தண்ணீரில் ஊற வைத்துக்கொள்ளவும்.
பின்னர் பாத்திரமொன்றில் நெய் ஊற்றி கருவேப்பிலை மற்றும் கடுகு ஆகியவற்றை சேர்த்து கொண்டு தோலை நீக்கிய சின்ன வெங்காயம் மற்றும் வரமிளகாய் இரண்டாக உடைத்தது பாத்திரத்தில் போட்டு வதக்க வேண்டும்.
நன்றாக வதங்கியதும் அதில் தக்காளி கொத்தமல்லி சாம்பார் பொடி போன்றவற்றை சேர்த்து மசாலா முழுவதும் படும் படி நன்றாக வதக்கி விட வேண்டும்.

பின்னர் இதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து மசாலா சிக்கன் முழுவதும் படும்படி கிளறி விடவும். பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஊற வைத்த அரிசி மற்றும் துவரம் பருபை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
கொதித்த பிறகு 10 நிமிடம் வரை தம்மில் வைத்து எடுத்து நெய் ஊற்றி இறக்கினால் மணக்க மணக்க சுவையான சாம்பார் பிரியாணி தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |