Samayal Express: கல்யாணமாகி 7 வருடம் ஆன பின் தான் ஹனிமூன்... பூர்ணிமா பாக்கியராஜ் ஓபன் டாக்!
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சமையல் எக்ஸ்பிரஸ் சீசன்2 நிகழ்சியில் போட்டியாளர்களாக நடிகர் மற்றும் இயக்குநர் பாக்கியராஜின் மனைவியும் நடிகையுமான பூர்ணிமா மற்றும் அவர்களின் மகள் சரண்யா ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் போது, தனது திருமணம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான விடயங்களையும் பூர்ணிமா பாக்கியராஜ் வெளிப்படையாக பகிர்ந்துள்ளார்.குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சமையல் எக்ஸ்பிரஸ் சீசன்2
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியாக விளங்கும் Zee தமிழ், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும் சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.
அந்த வரிசையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் முடிவடைந்த மக்களின் மனம் கவர்ந்த 'சமையல் எக்ஸ்பிரஸ்' நிகழ்ச்சியின் சீசன் 2 தற்போது ஒளிபரப்பாகிவருகின்றது.
கடந்த ஜூலை 6 ஆம் திகதி ஆரம்பமாகிய அந்த நிகழ்சி ஞாயிறு தோறும் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீசனை ஷாலின் சோயா தொகுத்து வழங்க, பிரபல நடிகை சுஜிதா தனுஷ் முதன்மை நடுவராக பங்கேற்று வருகின்றார்.
சமையல் திறமைகளுக்கும், கலகலப்பான போட்டி சூழலுக்கும் இடமளிக்கும் வகையில் நிகழ்ச்சி வெற்றிநடை போட்டு வருகின்றது.
பூர்ணிமா ஓபன் டாக்
இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட போது, தனது திருமணம் குறித்த பூர்ணிமா பாக்கியராஜ் பகிர்ந்த விடயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
