காதலர் தின சிறப்பு நிகழ்ச்சியில் கணவருடன் நடிகை நமீதா! தீயாய் பரவும் காணொளி
நடிகை நமீதா நீண்ட இடைவெளிக்கு பின்னர் தனது கணவருடன் இணைந்து பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாபகி வரும் சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சியின் காதலர் தின சிறப்பு எப்பிசோடில் பங்கேற்றுள்ள காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடிகை நமிதா
தமிழ் சினிமா ரசிகர்களை மாச்சான்ஸ் என்ற ஒரே வார்த்தையில் மயக்கியவர் தான் நடிகை நமீதா.அவரை பற்றி சொல்லி தாக் தெரிய வேண்டும் என்பது கிடையாது.

2004 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.முதல் படமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுத்தது.
அதனை தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. ஏய், பம்பர கண்ணாலே, ஆணை, கோவை பிரதர்ஸ், நான் அவன் இல்லை, தீ, பில்லா, அழகான பொண்ணுதான், இளமை ஊஞ்சல் எனப் பல படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளததையே உருவாக்கிக்கொண்டார்.

கவர்ச்சியின் உச்சத்துக்கே சென்ற நமீதா தொழில் அதிபர் வீரேந்திர சவுத்ரியை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

தற்போது இரட்டை குழந்தைகளுக்கு தாயாக உள்ள நமிதா கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

சினிமா மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளில் அவ்வப்போது பங்கேற்று வரும் அவர், தற்போது கவர்ச்சியான பாத்திரங்களைத் தவிர்த்து, குணச்சித்திர வேடங்களில் மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றார்.

இந்நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் மக்கள் மனம் கவர்ந்த சமையல் எக்ஸ்பிரஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கணவருடன் இணைந்து பங்கேற்றுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |