நோயுடன் போராடும் சமந்தா வெளியிட்ட உருக்கமான பதிவு
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.
சமந்தாவின் நடிப்பில் உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது.
இப்படம் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகிறது, பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு வரவேற்பு நிச்சயம் கிடைக்கும்.
இந்நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் சமந்தா, நீண்ட இடைவெளிக்கு பின்னர் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் பதிவிட்டுள்ளார்.
அதில், கடினமான நேரத்தில் உடற்பயிற்சி செய்ய என்னை ஊக்குவித்தவருக்கு நன்றி, இத்துடன் உணவு கட்டுப்பாட்டையும் கடைபிடித்து வருகிறேன்.
எது எப்படி இருந்தாலும் வலிமை என்பது நம் எண்ணத்திலும் இருக்கிறது, இதை தற்போது கற்றுக்கொள்ள முடிந்தது என தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.