சமந்தா மீண்டும் கணவருடன் இணைகின்றாரா? குழப்பத்தில் ரசிகர்கள்
திரையுலகமே வியக்கும் அளவுக்கு திருமண பந்தத்தில் இணைந்த ஜோடிகளுள் நாக சைதன்யா, சமந்தா முக்கிய இடம் வகிக்கின்றனர்.
யார் கண்ணு பட்டுடதோ? என யோசிக்க வைக்கும் அளவுக்கு அவர்கள் இருவரின் விவாகரத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது.
தற்போதைய இன்ஸ்டா பதிவுகள்
பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக 2021 ஆம் ஆண்டு பிரிந்துவிட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே.
விவாகரத்து பெற்ற நாகசைதன்யா பிரபல தென்னிந்திய நடிகை ஷோபிதா துலிபாலாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன.
தற்போது இவர்கள் இருவரும் மீண்டும் இணைகின்றார்கள் என சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு காரணம் சமந்தாவின் தற்போதைய இன்ஸ்டா பதிவுகள் தான் சமந்தா நாக சைதன்யாவுடன் விவாகரத்தானதன் பின்னர் தனது இன்ஸ்டா பக்கத்தில் இருவரும் இணைந்திருந்த புகைப்படங்களை மற்றவர்கள் பார்க்க முடியாதபடி செய்திருந்தார்.
அண்மையில் நாக சைத்தன்யா இரண்டாவது திருமணம் செய்யப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி சமந்தா ரசிகர்களை கவலையில் ஆழத்தியிருந்தது.
இந்நிலையில் சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் இருவரும் இணைந்திருந்த புகைப்படங்களை மீண்டும் பார்வையாளர்கள் பார்க்கக்கூடியவாறு மாற்றியிருப்பது நாக சைதன்யாவுடன் சமந்தா மீண்டும் இணைகின்றாரா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |