புதிய காதலருடன் நடிகை சமந்தா? கோபத்துடன் அவரின் மனைவி என்ன சொல்லி இருக்காங்க தெரியுமா?
நடிகை சமந்தா பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோரு உடன் அண்மை காலமாக நெருக்கமாக பழகி வருகிறார். அவர்கள் காதலித்து வருவதாகவும் ஒன்றாக சேர்ந்து வாழ போவதாகவும் சில வாரங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகி இணையத்தில் வைரலானது.

தீ கிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்... Dhee வெர்ஷன், சின்மயி வெர்ஷன் சர்சைக்கு முடிவு கட்டிய பாடகி சின்மயி!
சமந்தா- ராஜ் நிடிமோரு
சமந்தாவும், ராஜ் நிடிமோருவும் சமீபத்தில் திருப்பதி கோவிலுக்கு இணைந்து சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதால், பரபரப்பு கூடுதலாக அதிகரித்துள்ளது. ஆனால் இருவரும் காதல் குறித்து எந்தவிதமான விளக்கத்தையும் இதுவரையில் கொடுக்கவில்லை.
இந்நிலையில் சமந்தா - ராஜ் நிடிமோரு இணைந்து நடிக்கும் புதிய வெப் சீரிஸான 'Rakt Brahmand: The Bloody Kingdom' எனும் தலைப்பில் உருவாகி வருகிறது.அவருடன் இருக்கும் புகைப்படங்களை சமந்தா தொடர்ந்த்து இன்ஸ்டாவில் வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ராஜ் நிடிமோருவின் மனைவியான ஷயமலி டே, இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார். குறித்த பதிவால் சமந்தாவுக்கு - ஷயமலிக்கு இடையே மறைமுக யுத்தம் ஆரம்பித்துள்ளது.
குறித்த பதிவில் ஷயமலி டே, சனி கிரகத்தின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளதோடு. காலம் எல்லாவற்றையும் வெளிக்கொண்டு வருகிறது. கர்மா அதனை திருத்துகிறது. பிரபஞ்சம் பணிவை கற்றுக் கொடுக்கிறது" என பதிவிட்டு இருக்கிறார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் புதிய புயலை கிளப்பி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |