சமந்தாவிற்கு காதலர் விக்கியுடன் கேக் வெட்டிய நயன்தாரா: காரணம் என்ன? தீயாய் பரவும் புகைப்படம்
தமிழ் தெலுங்க என கலக்கி வரும் நடிகை சமந்தா, அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகின்றார். திருமணத்திற்கு பின்பும் தனக்கான ரசிகர் பட்டாளத்தினை வைத்திருக்கிறார்.
தற்போது தமிழில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் கதை என்ற படத்தில் சமந்தா நடித்து வருகிறார். படத்தில் சமந்தாவுடன் விஜய் சேதுபதி மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நடிகை சமந்தா நடிப்பில் வெளியான பேமிலிமேன் வெப்தொடர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பேமிலி மேன் தொடரின் இரண்டாம் பாகமும் வெளியானது.
சர்ச்சைகளை தாண்டி இத்தொடரில் நடிகை சமந்தாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்ட நிலையில், மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவின் வெப்சீரிஸ் பிரிவில் சிறந்த நடிகையாக சமந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த நடிகைக்கான விருது பெற்றதற்காக சமந்தாவை பலரும் பாராட்டி வரும் நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் கதை படப்பிடிப்பு தளத்தில் சமந்தாவுக்கு கேக் வெட்டி படக்குழுவினர் சந்தோஷத்தை கொண்டாடியுள்ளனர்.
விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் உடன் இருக்கும் போது சமந்தா கேக் வெட்டிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.