குடியரசு தின வரவேற்பு நிகழ்வில் நடிகை சமந்தா! வைரலாகும் உணர்வுபூர்வ பதிவு
இந்தியாவின் 77ஆவது குடியரசு தினதினத்தில், ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பாரம்பரிய ‘அட் ஹோம்’ வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகை சமந்தா ரூத் பிரபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட புகைப்படங்களை பகிர்ந்து தற்போது வெளியிட்டுள்ள உருக்கமான பதிவு இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடிகை சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா.திறமை, கடின உழைப்பு, விடா முயற்சி இருந்தால் கண்டிப்பாக முன்னேறலாம் பெரிய இடத்தை பிடிக்கலாம் என்பதற்கு உதாரணமாக திகழ்கின்றார்.

நடிகை சமந்தா மற்றும் டோலிவுட் நடிகர் நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள் என்பது அனைரும் அறிந்ததே.ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நான்கே ஆண்டுகளில் விவாகரத்து பெற்றார்கள்.
விவாகரத்துக்கு பின்னர் தனிமையில் இருந்த சமந்தா அண்மையில், பிரபல இயக்குனர் ராஜ் நிமோடி என்பவரை மறுமணம் செய்துகொண்டார்.

கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில் உள்ள லிங்க பைரவி கோயிலில் சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களின் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.

குடியரசு தின வரவேற்பு நிகழ்வில் சமந்தா
இந்நிலையில்,இந்தியாவின் 77ஆவது குடியரசு தினதினத்தில், ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பாரம்பரிய ‘அட் ஹோம்’ வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகை சமந்தா ரூத் பிரபு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார்.
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடன் சமந்தாவும் கலந்துக்கொண்டுள்ளார்.
இந்நிகழ்ச்சி அரசியல், இராஜதந்திரம், கலை, கலாச்சாரம் ஆகிய துறைகளின் சிறந்தவர்களை ஒருங்கிணைக்கும் பாரம்பரிய நிகழ்வாகும்.
சினிமா துறையில் மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும், தொழிலதிபராகவும், சமூக ஆர்வலராகவும் தனது பங்களிப்புகளால் சமந்தா தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அதனால் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு நேரடியாக சமந்தாவை அழைத்ததாக கூறப்படுகிறது.

சமந்தாவின் பதிவு
இந்த அரிய வாய்ப்பு குறித்து சமந்தா வெளியிட்டுள்ள பதிவில்,“நான் வளர்ந்த காலத்தில் எனக்குத் துணையாகவோ, தட்டிக் கொடுக்கவோ யாரும் இல்லை.
இங்கெல்லாம் வந்து சேருவேன் என்று ஒருபோதும் என் உள்ளுணர்வு சொன்னதே இல்லை. செல்ல வேண்டிய பாதை எதுவென்றும் தெரியவில்லை… இந்தக் கனவுகள் எல்லாம் காண்பதற்கே எட்டாத உயரத்தில் இருந்தன.
ஆனால், தளராமல் தொடர்ந்து உழைத்தேன். அந்த உழைப்பிற்கு மதிப்பளித்த இந்தத் நாட்டிற்கு நான் என்றும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன் என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |