என் காதலியை எப்படி விட்டுக்கொடுக்க முடியும்? vj பாரு பற்றி வெளிப்படையாக பேசிய கம்ருதீன்!
பிக்பாஸ் சீசன் 9 இல் ரெட் கார்டுடன் வெளியேறிய vj பார்வதி மற்றும் கம்ருதீன் கிராண்ட் பினாலே மேடைக்கு தொகுப்பாளர் விஜய் சேதுபதியால் அழைக்கப்பட்டனர் என்பது அனைவரும் அறிந்தது தான்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கம்ருதீன்; விஜே பார்வதியுடனான பழக்கம் பற்றி பேசிய விடயம் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகின்றது.

பிக்பாஸ் சீசன் 9
ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் ஒரு முக்கிய நிகழ்ச்சியான பிக்பாஸ் 8 சீசன்களை கடந்து, தற்போது 9 ஆவது சீசனையும் வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கின்றது.
பிக்பாஸ் சீசன் 9 கடந்த சமீபத்தில் கிராண்ட் பினாலேயுடன் வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. இந்த சீசனின் டைட்டில் வெற்றியாளராக திவ்யா கனேஷ் அறிவிக்கப்பட்டார்.

இந்த சீசனில் டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் சாண்ட்ராவை காரில் இருந்து தள்ளிவிட்டமை மற்றும் கெட்ட வார்த்ததைகள் பேசியமை ஆகிய விடயங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களை கிளப்பியிருந்தது.
இதனால் ரசிகர்கள் பார்வதி, கம்ருதினுக்கு ரெட் கொடுக்குமாறு வேண்டுகோள் வைத்திருந்தனர். ரசிகர்கள் எதிர்பார்த்தப்படியே விஜய் சேதுபதி அதிரடியாக கம்ருதீன் மற்றும் பார்வதியை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார்.இவர்கள் வெளியேற்றப்பட்டதுபெரும்பாலானவர்களுக்கு மகிழ்ச்சியைத்தான் கொடுத்தது.

ரெட் கார்டு கொடுக்கப்பட்டதால், 90 நாட்கள் உள்ளே இருந்து விளையாடிய இருவருக்கும், நிகழ்ச்சி சார்பில் எந்தவொரு பரிசும், AV காணொளியும், மேடையில் வரவேற்பும் வழங்கப்பட மாட்டாது எனவும் இவர்கள் இருவரும் இத்தனை நாட்கள் விளையாடியதற்கு சம்பளமும் வழங்கப்பட மாட்டாது என்று தகவல்கள் வெளியாகியிருந்தது.
ஆனால் பிக்பாஸ் கிராண்ட் பினாலே நிகழ்வுக்கு பார்வதி, கம்ருதினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும் பிக்பாஸ் வீட்டில் நடந்த அனைத்தையும் நல்ல அனுபவமாக எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியாக விடைபெற வேண்டும் என்ற நோக்கில் தான் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், பிக்பாஸ் வீட்டை பெறுத்த மட்டில் அனைவரும் ஒன்று தான் என விஜய் சேதுபதி மேடையில் குறிப்பிட்டார்.

அதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த பின்னரும் பாரு மற்றும் கம்ருதீன் அவர்களின் உறவை தொடர்ந்து வருகின்றார்கள். இவர்கள் இணைந்து வெளியில் சென்ற புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி நிகழ்ச்சியொன்றில் பார்வதி பற்றி கம்ருதீன் பேசிய விடயம் இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது.
அவர் குறிப்பிடுகையில், "வாழ்க்கை முழுக்க இவர்கள் வேண்டும் என்கிற ரீதியில்தான் கானா வினோத், விஜே பார்வதியிடம் பழகினேன்.

பார்வதி கொஞ்சம் ரக்கடான பெண்தான். ஆனாலும் அவருக்குள்ளும் ஒரு நல்ல பக்கம் இருக்கிறது. அந்த நல்ல பக்கத்தைத்தான் நான் விரும்புகிறேன்.யாருக்காகவும் என்னை விட்டுக்கொடுக்க மாட்டாள், பார்வதியை விட்டுவிடுவீர்களா? என என்னை சிலர் கேட்டிருக்கின்றார்கள் நண்பனையே விட்டுக்கொடுக்க மாட்டேன்... காதலியை எப்படி விட்டுக்கொடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நான் விளையாட்டு என்பதையே மறந்துவிட்டு வாழவே ஆரம்பித்துவிட்டேன். சாண்ட்ராவுடனான அந்த சம்பவத்துக்கு பிறகு எனக்கு ரெட் கார்டு கொடுத்துவிடுவார்களோ என்று தோன்றிக்கொண்டே இருந்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |