காதல் கணவரை பிரிகிறேன்: ஒரே நேரத்தில் சமந்தா, நாக சைதன்யா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! கதறும் ரசிகர்கள்
நடிகை சமந்தா மற்றும் அவரது கணவர் நாக சைதன்யா ஆகியோர் ஒத்த மனத்துடன் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா கடந்த 2017ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்குப் பிறகும் சமந்தா திரைப்படங்களிலும், வெப் தொடர்களிலும் நடித்து வரும் நிலையில், இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதையடுத்து, அதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த ஜூலை மாதத்தில் சமூக வலைதளத்தில் அவருடைய பெயரை மாற்றினார்.
திருமணத்துக்குப் பிறகு கணவரின் குடும்பப் பெயரான அக்கினேனியை தனது பெயருடன் இணைத்துக் கொண்டவர், ஜூலை மாதத்தில் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆங்கிலத்தில் 'எஸ்' என்று பெயரை மாற்றினார்.
இதனால் இருவரும் பிரிகின்றனர் என்று அடுத்தடுத்து ரசிகர்களும், ஊடகங்களும் கூறிவந்ததற்கு இருவரும் மௌனம் காத்தனர். இந்நிலையில் நாகசைதன்யாவும், சமந்தாவும் தாங்கள் பிரிவதாக தத்தம் சமூக வலைதள பக்கங்களில் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து நாகசைதன்யா இன்டாகிராம் பதிவில், ‘நீண்ட ஆலோசனைக்குக்குப் பிறகு கணவன் மனைவியாக உள்ள நானும் சமந்தாவும் பிரிந்து தனித்து செல்வதற்கு முடிவு செய்துள்ளோம்.
பத்துவருடங்களுக்கு மேலாக நண்பர்களாக இருப்பதற்கு எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த கடினமான நேரத்தில் அனைவரும் உறுதுணையாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இவர்களின் இந்த முடிவினை கண்ட ரசிகர்கள் காரணம் எதுவும் தெரியாமல், நாக சைதன்யாவிடம் கதறியவாறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.