பிரபல இயக்குனரை ரகசிய திருமணம் செய்த சமந்தா: வெளியான திருமண புகைப்படம்
நடிகை சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோருவை இன்று இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
நடிகை சமந்தா
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவைக் காதலித்து, திருமணம் செய்தார். பின்பு சில வருடங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு அவரைப் பிரிந்தார்.
சமந்தாவை விவாகரத்து செய்த நாக சைதன்யாக நடிகை சோபிதா துலிபாலாவை இரண்டாவது திருமணம் செய்து வாழ்ந்து வருகின்றார்.
சமந்தா விவாகரத்து பின்பு அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொண்டதுடன், தற்போது அதிலிருந்து மீண்டு வந்ததுடன், படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்றார்.

இரண்டாவது திருமணம்
நடிகை சமந்தா பேமிலி மேன் என்ற வெப்சீரிஸில் நடிக்கும் போது இதன் இயக்குனரான ராஜ் நிடிமோருவுடன் நட்பாக பழகி வந்தார்.
இவர்கள் இருவரும் வெளியிடங்களுக்கு சென்று ஒன்றாக புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் நடிகை சமந்தா இயக்குனர் ராஜ் நிடிமோருவை இரண்டாவதாக இன்று திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் மிகவும் எளிய முறையில் கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |