பிரபல நடிகையுடன் நாக சைதன்யா காதல்? பகீர் உண்மைகளை வெளியிட போகும் சமந்தா
தனக்கும், நாக சைதன்யாவுக்கும் விவாகரத்து ஆனது ஏன் என்ற கேள்விக்கு பதிலளிக்கவுள்ளார் நடிகை சமந்தா.
விவாகரத்தில் முடிந்த திருமணம்
தமிழ் நடிகை சமந்தா, பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பரஸ்பரம் விவாகரத்து செய்தனர்.
தற்போது இருவரும் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
பிரபல நடிகையுடன் காதல்
இந்த நிலையில், நாக சைதன்யாவும் நடிகை சோபிதா துலிபலாவும் காதலித்து வருவதாக காதலித்து வருவதாக செய்திகள் உலா வருகின்றன.
சமந்தாவின் அபிமானிகள் சிலர் தான் இதுபோன்ற புரளிகளை பரப்பியதாக சிலர் விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் இதுகுறித்து டுவிட் செய்துள்ள சமந்தா, ஒரு பெண்ணைப் பற்றி வதந்திகள் வந்தால் அது உண்மையாக இருக்கக்கூடும் என்கிறீர்கள்.
அதுவே ஒரு ஆணை பற்றி வதந்தி செய்தி வெளியானால், அதையும் ஒரு பெண் தான் செய்வார் என்கிறீர்கள். சிந்தனையை வளர்த்து கொள்ளுங்கள். சம்பந்தப்பட்டவர்களே இதனை கடந்து சென்று விட்டனர், நீங்களும் கடந்து செல்லுங்கள். உங்கள் வேலையில் கவனம் செலுத்துங்கள். உங்கள் குடும்பத்தை கவனியுங்கள்' என தெரிவித்துள்ளார்.
காபி வித் கரண்
இருவரும் ஏன் விவாகரத்து செய்து கொண்டார்கள் என்பதற்காக காரணம் இதுவரை தெரியவரவில்லை, இருவருமே இதுவரை வாய்திறக்கவில்லை.
இந்நிலையில் இந்தியில் புகழ்பெற்ற நிகழ்ச்சியான காபி வித் கரணில் சமந்தா கலந்துகொண்டதாகவும், அதில் தன்னுடைய விவாகரத்து குறித்து பேசியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
