சமந்தா அணிந்திருக்கும் இந்த சேலையின் விலை இத்தனை கோடியா! ஷாக்கில் நாகசைத்தான்யா குடும்பம்
நடிகை சமந்தா அவரின் சமூகவலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள புடவையின் விலையை கேட்டு ரசிகர்கள் பேரதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
நடிகை சமந்தா விவாகரத்திற்கு பிறகு சினிமாவில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.
கோலிவுட்டில் அவர் நடிப்பில் உருவாகி உள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகிறது. டோலிவுட்டில் சகுந்தலம் படம் ரிலீசாக உள்ள நிலையில், அடுத்ததாக யசோதா படத்திலும் நடித்து வருகிறார்.
அது மட்டும் இன்றி அவரின் சமூகவலைத்தள பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகின்றார். இந்த நிலையில் அண்மையில் அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்து வருகின்றது. காஸ்ட்யூம் டிசைனர் அர்ச்சனா ஜாகுவின் கை வேலைப்பாடுகள் நிறைந்த இந்த சேலையின் விலை ரூ. 1,14,999 என அவரது வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நடிகை சமந்தாவின் இந்த சேலை 1.15 லட்சமா என ரசிகர்கள் வாயை பிளந்து பார்த்துள்ளனர்.
மேலும், அவர் அணிந்திருந்த நகைகள் எல்லாமே விலை உயர்ந்தவை என்றும் கூறப்படுகிறது. இதேவேளை, அண்மையில் நடிகை சமந்தா தனது திருமண புடவையை நாகசைத்தான்யாவின் குடும்பத்திடம் திரும்பி கொடுத்து விட்டதாக தகவல் வெளியானது. இதனால், நாகசைத்தான்யாவின் குடும்பம் பேர் அதிர்ச்சியில் உள்ளனர்.
இவர்கள் இருவரும் சேர்ந்து விடுவார்கள் என எதிர்பார்த்த நிலையில் சமந்தாவின் இந்த செயல் பலரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சமந்தா நாக சைதன்யா தொடர்பான எதையும் தன்னுடன் வைத்திருக்க வேண்டாம் என முடிவு செய்துவிட்டதாக சமந்தாவின் தோழிகள் தெரிவித்துள்ளனர்.