சமந்தா கர்ப்பமா? சினிமாவில் இருந்து ஒரு குட்டி பிரேக் எடுக்கப் போகின்றார்....தீயாய் கிளம்பிய புதிய சர்ச்சை
சினிமாவில் இருந்து ஒரு குட்டி பிரேக் எடுக்கப் போகிறேன் என்று சமந்தா தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் கர்ப்பமாக இருப்பதாக பேச்சு கிளம்பியிருக்கிறது.
சமந்தாவுக்கு திருமணமானதில் இருந்து இன்னும் கர்ப்பமாகவில்லையா என்று அவரிடம் ரசிகர்கள் அடிக்கடி கேட்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் கடுப்பான சமந்தா, எப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தனக்கு தெரியும் என பதில் அளித்தார். இந்நிலையில் மீண்டும் கர்ப்ப பேச்சு கிளம்பியிருக்கிறது.
முன்னதாக சமந்தா, சமூக வலைதளங்களில் தன் பெயருக்கு பின்னால் இருந்த கணவரின் குடும்ப பெயரான அகினேனியை நீக்கினார்.
அதை பார்த்தவர்கள் சமந்தாவுக்கும், நாக சைதன்யாவுக்கும் இடையே பிரச்சனை, விவாகரத்து பெறப் போகிறார்கள். அதனால் தான் அகினேனியை கழற்றிவிட்டுவிட்டார் என்றார்கள். விவாகரத்து பேச்சு கிளம்பிய வேகத்தில் தன் கணவருடன் சேர்ந்து கோவாவில் நிலம் வாங்கியிருக்கிறார் சமந்தா. இந்த நிலையில் தற்போது கர்ப்பமாக இருப்பதால் குட்டி பிரேக் எடுக்கின்றார் என்ற சர்ச்சை கிழம்பியுள்ளது. இது எங்கு சென்று முடிய போகின்றதோ தெரிய வில்லை.