விவாகரத்தால் நான் இறந்துவிடுவேன் என நினைத்தேன்! மனம் உருகி பேசிய நடிகை சமந்தா!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சமந்தா. இவர், கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்திற்கு பின் மிகவும் அழகாக சென்றுக்கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கை, திடீரென பல பிரச்சினைகள் ஏற்பட்டு தனது கணவர் நாக சைதன்யாவை பிரியப்போவதாக அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதியில் அறிவித்து இருந்தார்.
இதனையடுத்து, சினிமா ஷுட்டிங், சுற்றுலா தளங்கள் என அங்கு எல்லாம் சென்று இணையத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர், சமீபத்தில் பிலிம்ஃபேருக்கு பேட்டி ஒன்றை அளித்து இருக்கிறார்.
அந்த பேட்டியில் பேசிய அவர், சமந்தாவின் விவாகரத்துக்கு கேள்விக்கு பதிலளித்து இருக்கிறார். அதில், “ஆரம்பத்தில் நான் மிகவும் பலவீனமானவள் என்று தான் நினைத்தேன். விவாகரத்து பிரிவால், நான் மிகவும் மனம் நொறுங்கி இறந்துவிடுவேன் என்று நினைத்திருந்தேன்.
ஆனால், நான் இவ்வளவு வலிமையானவளாக இப்போ இருக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. தற்போது நான் இவ்வள வலிமையாக இருக்கிறேன் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
ஏனென்றால், நான் இவ்வளவு வலிமையானவள் என்பது இதற்கு முன் எனக்கு தெரியாது. எளிமையான தொடக்கத்தில் இருந்து வந்த நான், எனது முதல் படத்திலேயே உடனடியாக வெற்றியைக் கண்டேன்.
அதனால், நான் மகிழ்ச்சியாக இருப்பதாக அனைவரும் நினைக்கலாம். ஆனால் உண்மையி அதுவல்ல, பார்வையாளர்களிடமிருந்து நான் பெறும் அனைத்து அன்பிற்கும் நான் தகுதியானவள் அல்ல என்பது என்னை மேலும் நொறுங்க செய்கிறது., இப்பொது நான் அதை எதிர்த்து போராடுவதை நிறுத்திவிட்டேன் என்று சோகத்துடன் சமந்த பகிர்ந்துள்ளார்.