சமந்தா-நாக சைத்தன்யா திருமணத்திற்கு எத்தனை கோடி செலவு தெரியுமா? ஷாக்கான ரசிகர்கள்... காட்டுத் தீயாய் பரவும் தகவல்
கோலாகலமாக நடந்த சமந்தா,நாக சைத்தன்யாவின் திருமணத்திற்கு ஆன செலவு குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி அனைவரின் தலையை கிறுகிறுக்க வைத்துள்ளது.
தமிழை தாய் மொழியாக கொண்ட சமந்தா பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்தவர். தமிழை அழகாக பேசி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
சமந்தா முதல் படத்தில் தன்னுடன் நடித்த நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் குறித்த தகவல் இணையத்தில் தொடர்ந்து தீயாக பரவி வருகிறது.
இந்நிலையில் சமந்தா, நாக சைத்தன்யாவின் திருமண செலவு குறித்த தகவல் தற்போது பரவி வருகிறது. கோவாவில் மிகவும் கோலாகலமாக நடந்த திருமணத்தில் 150 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
மேலும், 2017 அக்டோபர் 6ந் தேதி இந்து முறைப்படியும், 7ந் தேதி கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் நடந்தது. மிகவும் பிரம்மாண்டமாக நடந்த அவர்களது திருமண செலவு மட்டும் ரூ. 10 கோடியை தாண்டிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.