சினிமாவிலிருந்து விலகுகிறாரா சமந்தா? சிகிச்சைக்கு வெளிநாடு செல்ல முடிவு
நடிகை சமந்தா சிகிச்சைக்காக தென் கொரியா பயணம் செய்ய உள்ளதாகவும், சினிமாவில் இருந்து விலகுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சமந்தா
நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்.
பின்பு சினிமாவில் கவனம் செலுத்தி வந்த அவருக்கு அரிய வகை நோயான மயோசிடிஸ் எனப்படும் தசைவீக்க நோய் ஏற்பட்டுள்ளது.
இதனால் நடக்கமுடியாமல் அவதிப்பட்ட நடிகை சமந்தா மருத்துவமனையில் படுத்த படுக்கையாகி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
கண்ணீர் மல்க சமந்தா
பின்பு யசோதா திரைப்படத்தினைக் குறித்து பேசுகையில், தனது நிலைமை குறித்து கவலையுடன் கண்ணீர் சிந்தினார்.
யசோதா திரைப்படத்தில் சமந்தா வாடகை தாயாக நடித்து பரபரப்பினை ஏற்படுது்திய நிலையில், தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்தில் நடித்து வந்தார்.
தற்போது நோயின் தாக்கம் அதிகமாக இருந்ததால், படப்பிடிப்பிற்கு செல்லாத சமந்தா வீட்டில் ஓய்வு பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சைக்காக தென் கொரியா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி நடிகை சமந்தா இதற்கு பின்பு நடிப்பிலிருந்து விலகிவிடுவதாகவும் தகவல் வெளியான நிலையில், ரசிகர்கள் இவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
6 மாத காலம் சினிமாவிலிருந்து ஓய்வு பெற்று பின்பு ரீ எண்ட்ரி கொடுக்க உள்ளதாக சமந்தா தரப்பில் கூறப்பட்டுள்ளது.