குரங்குடன் சமந்தா! வைரலாகும் புகைப்படங்கள்
பிரபல நடிகையான சமந்தா பாலி தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம்வந்து கொண்டிருக்கிறார் சமந்தா.
கடின உழைப்பாலும், அசாத்திய நடிப்பாலும் மிக குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக உயர்ந்தவர் சமந்தா.
தென்னிந்திய மொழிகளில் டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துள்ள சமந்தா எதிர்பாராதவிதமாக மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டார்.
இதனால் சில காலம் ஓய்விலும் சிகிச்சையிலும் இருந்த சமந்தா, தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியிருக்கிறார்.
விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற படத்தில் நடித்து முடித்துள்ள சமந்தா, மயோசிடிஸ் நோய் சிகிச்சைக்காக ஓராண்டு காலம் சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
அமெரிக்கா மற்றும் தென்கொரியாவில் சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளாராம் சமந்தா.
இதற்கு முன்னதாக தனது தோழியுடன் பாலி தீவுகளுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார், அங்கிருந்து இயற்கையை ரசித்தபடி சமந்தா வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வந்தது.
தற்போது குரங்கை கையில் வைத்துக் கொண்டு, செல்பி எடுத்தபடி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |