நோயுடன் போராடிய சமந்தாவிற்கு கடவுளாக வந்து உதவிய நபர் யார் தெரியுமா? உருக்கமான பதிவு
நடிகை சமந்தா தான் நோயினால் போராடிய போது தனக்கு கடவுள் போல உதவியவராக நபர் ஒருவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம்வரும் சமந்தா, அரிய வகை நோய் பாதிப்பினால் அவதிப்பட்டு வருகின்றார்.
தமிழ் மட்டுமின்றி பாலிவுட்டிலும் கால் பதித்து கலக்கிய இவர், சில மாதமாக உடல்நிலை சரியில்லாமல் காணப்பட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சமந்தா நடிப்பில் யசோதா படம் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், இன்னும் சில தினங்களில் இவரது சகுந்தலம் படம் ரிலீசாக உள்ளது.
இவர் நடிகர் நாக சைதன்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் பின்பு கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். சகுந்தலம் படத்தில் நடித்துள்ள சமந்தா இந்த படத்திற்கு அதிகமான ரிஸ்க் எடுத்துள்ளார். இப்படம் வரும் 17ம் தேதி வெளியாக உள்ளது.
சமந்தாவின் இன்ஸ்டா பதிவு
சமந்தா தனக்கு தானே நம்பிக்கை கொடுக்கும்வகையில் வார்த்தைகள் அடங்கிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் நீ விரைவில் குணம் அடைவாய் என்றும் இந்த 7 -8 மாதங்களில் நீ மோசமான நாட்களை பார்த்துள்ளாய் என்றும் சமந்தா தனக்கு தானே தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னுடைய இந்த இன்ஸ்டாகிராம் பதிவில், தான் தன்னுடைய நண்பர்களுடன் இருக்கும்படியாகவும், மருத்துவமனையில் மற்றும் ஜிம்மில் வொர்க்அவுட் செய்யும்படியாகவும் புகைப்படங்களை சமந்தா பதிவிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படங்களூடாகவே தற்போது தனக்கு தானே நம்பிக்கை தெரிவிக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்துவரும் சமந்தாவிற்கு, நடுவில் அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டதால் தொடர்ந்து படங்களில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே அவரின் சாகுந்தலம் படம் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ளது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.