இணையத்தளத்தை தெறிக்க விடும் சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம் - வாயடைத்த ரசிகர்கள்!
வெளியான சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் வாயடைத்துள்ளனர்.
சமந்தா - நாகசைதன்யா விவாகரத்து
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். இவர்கள் இருவரும் விவகாரத்து செய்து பிரிந்து செல்வதாக சமூகவலைத்தளங்களில் அறிவிப்பை வெளியிட்டனர்.
இந்த அறிவிப்பைப் பார்த்து ஒட்டுமொத்த ரசிகர்களும், சினிமாத்துறையினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனையடுத்து, தன்னுடைய பெயருக்கு பின்னால் இருக்கும் கணவர் பெயரான நாகசைதன்யாவை அதிரடியாக நீக்கினார் நடிகை சமந்தா. இதன் பிறகு, இவர்கள் இருவரும் தன்னுடைய வேலையில் மிகவும் பிஸியாக இறங்கி செயல்படத் தொடங்கினர்.
நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா -
சமீபத்தில் நடிகை சமந்தா ரசிகர்களுக்கு தான் மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கபட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் பின்பு, உடல் நிலை மேலும் மோசமடைந்ததால் ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்த சமந்தா, பிறகுமேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று சமீபத்தில் நாடு திரும்பினார்.
வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்
இந்நிலையில், நடிகை சமந்தா தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில், கருப்பு உடையில் மாஸாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தைப் பார்த்த அவரது ரசிகர்கள் வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அதை தைரியத்தோடு எதிர்கொண்டு எங்கள் நாயகி சமந்தாவிற்கு வாழ்த்துக்கள் என்றும், மேலும் சிலர் சமந்தாவின் அழகை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
The London skyline ft. #Samantha!?✨
— Filmfare (@filmfare) April 19, 2023
The actress attended the premiere of #Citadel. pic.twitter.com/QYF3LpfwYf