கடவுளே என்னை காப்பாற்று.. தெய்வத்திடம் சரணடைந்த பிரபலம்! வைரலாகும் புகைப்படம்
கடவுளே என்னை காப்பாற்று, என இறைவனிடம் கடுமையான தியானத்தில் இருக்கும் நடிகை சமந்தாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சினிமாவிற்குள் எப்படி வந்தார் தெரியுமா?
தமிழ் சினிமாவில் “பானா காத்தாடி” என்ற திரைப்படத்தில் முன்னாள் நடிகர் முரளியின் மகனுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் தான் நடிகை சமந்தா.
இவரின் முதல் படம் நினைத்தளவு வெற்றியை தராவிட்டாலும், இவரின் அடுத்தடுத்து வெளிவந்த திரைபடங்கள் மக்களுக்கு பிடித்தமானதாகவும் விரும்பி பார்க்கும் திரைப்படமாகவும் மாறியுள்ளது.
இன்று தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவரின் சம்பளம் நாளுக்கு நாள் உயர்வடைந்துக் கொண்டே செல்கிறது.
இதனை தொடர்ந்து சமந்தா விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் என பல தமிழ் சினிமாவில் முன்னணி இருக்கும் நடிகர்களுடன் கலக்கி வருகிறார். மேலும் சமந்தா பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இறை வழிபாட்டில் மூழ்கிய சமந்தா
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது அவரது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
இவர் நோயிலிருந்து மீண்டு வந்த பின்னர், அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் கடவுள் முன் அமர்ந்து தியானிக்கும் புகைப்படமொன்றை பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த இணையவாசிகள், “கடவுளே என்னை காப்பாற்று என சமந்தா வேண்டிக் கொள்கிறார்” என கமண்ட் செய்து வருகிறார்கள்.