Sobhita Dhulipala: சமந்தா சோபிதாவின் தங்கையா? இணையத்தில் புதிய புயலை கிளப்பிய தகவல்
சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யாவிற்கும் நடிகை சோபிதாவிற்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் சமந்தாவும் சோபிதாவும் உறவினர்கள் என்ற தகவல் இணையத்தில் கசிந்து அசுர வேகத்தில் பரவி வருகின்றது.
சோபிதா துலிபாலா யார்?
நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும் 7 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின்னரும் சமந்தா சினிமாவில் பிசியாக இருந்து வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.
இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2021இல் இருவரும் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வந்தனர். இந் நிலையில் கடந்த சில மாதங்களாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை சோபிதா துலிபாலாவும் நாக சைதன்யாவும் காதலிப்பதாக இணையத்தில் தகவல்கள் அவ்வப்பபோது வைரலானது.
மேலும் சில மாதங்களுக்கு முன்பு, இருவரும் லண்டன் ஹோட்டலில் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் கசிந்து ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியது.
அதனை தொடர்ந்து, இருவரும் ஒரே இடத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனித்தனியே இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதால் மேலும் ரசிகர்கள் மத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், இதுகுறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு இருவரும் தொடர்ந்து எந்த விதமான பதிலையும் கொடுக்கவில்லை.
இந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள நாக சைதன்யாவின் இல்லத்தில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதை, நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜுனாவே டுவிட்டர் எக்ஸ்தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு உறுதிப்படுத்தினார்.
சாேபிதா-நாக சைதன்யாவின் நிச்சயதார்த்தம் முடிவடைந்த நிலையில் சோபிதா துலிபாலா பற்றிய பல தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த வகையில், நடிகை சோபிதாவும் சமந்தாவும் உறவினர்கள் என்ற தகவல் வெளியாகி சமந்தா ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெளிவாக விசாரித்து பார்த்த பின்னர் சோபிதாவின் சகோதரி பெயரும் சமந்தாதான் என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதை தான் நடிகை சமந்தா சோபிதா துலிபாவின் சகோதரி என ரசிகர்கள் குழப்பிக்கொண்டுள்ளனர். ஆனால் உண்மையில் இவர்கள் இருவரும் உறவினர்கள் அல்ல.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |