நடுங்கும் 4 டிகிரி குளிரில் ஐஸ் தண்ணீரில் 6 நிமிடம் நின்ற சமந்தா: ஷாக்கான ரசிகர்கள்
இந்தோனேஷியாவில் நடுங்கும் 4 டிகிரி குளிரில் ஐஸ் தண்ணீரில் 6 நிமிடம் நின்ற சமந்தாவின் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
இவர் தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
இதன் பிறகு சமூகவலைத்தளங்களில் தன் பெயருக்கு பின்னால் இருந்த நாகசைதன்யாவை அதிரடியாக நீக்கினார்.
நடிகை சமந்தா மயோசிடிஸ் எனப்படும் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதன் பிறகு, உடல் நிலை மேலும் மோசமடைந்ததால் ஐதராபாத்திற்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
பிறகு மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று நாடு திரும்பினார். சமீபத்தில் சமந்தாவின் ‘சகுந்தலம்’ படம் வெளியானது.
இதற்கு அடுத்து, காதல் படமான “குஷி” என்ற படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.
வைரலாகும் வீடியோ
இந்நிலையில் இந்தோனேசியாவிற்கு தன் தோழி மற்றும் மேக்கப் கலைஞர் அனுஷ் சாமியுடன் நடிகை சமந்தா சுற்றுலா சென்றுள்ளார்.
தற்போது அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன் இன்ஸ்டாவிலும், டுவிட்டரிலும் வெளியிட்டு வருகிறார் சமந்தா.
இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் குஷியில் லைக்குகளை அள்ளி தெறித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது சமந்தா வெளியிட்ட ஒரு வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் அப்படியே ஷாக்காகியுள்ளனர்.
அந்த வீடியோவில், 4 டிகிரி குளிரில் 6 நிமிடங்கள் ஐஸ்பாத் எடுத்துள்ளார் சமந்தா. மேலும், ஐஸ் பாத் எடுத்தால் தன் உடலுக்கு நன்மை கொடுப்பதாக சமந்தா தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் அய்யோ... என் தேவதை இப்படி கடும் குளிரிலும் கஷ்டப்படுகிறதே என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
? #icebaths 4 degrees - 6 minutes
— SAM ARMY || KnowUrStarSAM™ (@KnowUrStarSAM) July 26, 2023
~ Our @Samanthaprabhu2 ??#Samantha #SamanthaRuthPrabhu pic.twitter.com/rXHVdNy1FU
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |