இரண்டாவது திருமணத்துக்கு நோ சொல்லும் சமந்தா.... குழந்தைக்கு ஓகே செல்லுகிறார்!
நடிகை சமந்தா குழந்தை விஷயத்தில் முக்கிய முடிவு எடுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை சமந்தா
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் கோலிவுட்டில் இருக்கும் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.
தற்போது சமந்தா 'சென்னை ஸ்டோரி' என்கிற ஹாலிவுட் படம் ஒன்றில், தமிழ் பெண் வேடத்தில் நடிக்க உள்ளார். கூடிய விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த துவங்கிய பின்னர் சமந்தா, விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படங்களிலும் பிசியாக இருக்கிறார்.
நடிகை சமந்தா, இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'விண்ணை தாண்டி' வருவாயா படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், தெலுங்கில் திரிஷா ஏற்று நடித்திருந்த வேடத்தில் இவரும், சிம்பு கதாபாத்திரத்தில் நாக சைதன்யாவும் நடித்திருந்தனர்.
இந்த படம் இவர்கள் இருவருக்குமே திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இதை தொடர்ந்து, தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலுமே சமந்தா கவனம் செலுத்த துவங்கிய நிலையில், மிக குறுகிய காலத்தில், இரு மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.
இந்நிலையில் கணவர் நாக சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் இடையே ஏற்பட்ட சிறு கருத்து வேறுபாடு இவர்கள் இருவரையும் விவாகரத்து வரை கொண்டு வந்தது. கடந்த இரண்டு வருடத்திற்கு முன்னர், இருவரும் சட்டபூர்வமாக பிரிய உள்ளதை நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் உறுதிப்படுதத்தினர்.
விவாகரத்துக்கு பின்னர் சமந்தா, மயோசிட்டிஸ் பிரச்சனையால் அவதிப்பட நேர்ந்தது. இதற்காக கடந்த ஒரு வருடத்திற்கு மேல் சிகிச்சை எடுத்து வரும் இவர், கடந்த 6 மாதமாக முழு ஓய்வில் இருந்து சிகிச்சை மேற்கொண்டார்.
தற்போது மீண்டும் படு பிஸியாகியுள்ள சமந்தா பற்றி, பற்றி தெலுங்கு மீடியாக்களில் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.
இந்நிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது பற்றி, இதுவரை எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லையாம். எனினும் குழந்தைகள் என்றால் அவருக்கு மிகவும் பிடிக்கும் என்கிற காரணத்தால் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க உள்ளாராம்.
ஆனால் இந்த தகவல் குறித்து தற்போது வரை எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் சமந்தா தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |