சர்ச்சைக்கு பிறகு சமந்தாவின் மீம் போஸ்ட்! கடும் குழப்பத்தில் ரசிகர்கள்... என்ன தான் நடந்திருக்கும்?
ஊடகங்களை விமர்சிக்கும் விதமாக மீம் ஒன்றை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
நடிகை சமந்தா பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவை காதலித்து கரம் பிடித்தார்.
திருமணத்துக்கு பின்னர் ட்விட்டரில் கணவரின் குடும்பப்பெயரான அக்கினேனியை தன் பெயருக்கு பின்னால் சேர்த்துக்கொண்டு சமந்தா அக்கினேனி என மாற்றிக்கொண்டார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ட்விட்டரில் தன் பெயரை முழுமையாக நீக்கிவிட்டு ஆங்கில எழுத்தான ‘S’ என்று மாற்றினார்.

சமந்தா என்ன நினைத்து மாற்றினாரோ என்னவோ தெலுங்கு மீடியாக்களில் சமந்தாவுக்கு நாக சைதன்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருக்கிறார்கள். சமந்தா தன் தோழி வீட்டில் இருக்கிறார் என செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து சமந்தாவோ, நாக சைதன்யாவோ எதுவும் பேசவில்லை. இந்நிலையில் ஊடகங்களை விமர்சிக்கும் விதமாக மீம் ஒன்றை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் நாய் ஒன்று ஆக்ரோஷமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஊடகங்கள் குறித்து கூறப்படுவது என்றும். அமைதியாக இருக்கும் நாய்களின் புகைப்படத்தை பகிர்ந்து ஊடகத்தின் உண்மை நிலை என்றும் குறிப்பிட்டுள்ளார். சமந்தா குறித்து செய்தி வெளியிட்ட ஊடகங்களை விமர்சிக்கும் வகையில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் என்னதான் நடந்திருக்கும் என்று புலம் வருகின்றனர்.